பாதுகாப்பையும், தலைவர்களையும் பிரிக்க முடியாத ஒன்று. சர்ச்சைகளைக் கூட தலைவர்களிடம் இருந்து பிரித்து விடலாம். ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்பினைப் பிரிக்க இயலாது. அப்படி, உலகளவில் அதிக பாதுகாப்பு வழங்கப்படுகின்ற தலைவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
இவரை நம் அனைவருக்கும் தெரியும். இங்கிலாந்து நாட்டின் இளவரசர்களில் ஒருவரான இவர், அமெரிக்காவின் மீகன் மார்க்கெல்லை திருமணம் செய்து கொண்டு, புதுமணத் தம்பதியாக உலா வருகின்றார். இவருக்காக, விண்ஸ்டர் பெர்க்ஸேர் என்ற இடத்தில், இவர்களுக்கு வீடு, இல்லை அரண்மனை உள்ளது. அங்கு அவருடைய பாதுகாப்புக்காக, 6,54,000,000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடைய அரண்மனையைச் சுற்றி, டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறந்தால், சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் இருப்பார்கள். அதே சமயம், அந்த டிரோன் சுட்டுத் தள்ளப்பட்டு விடும். இவருடையப் பாதுகாப்பிற்காக, சுமார் 1000 பாதுகாவலர்கள் ஒவ்வொரு நொடியும் செயல்படுகின்றனர்.
இவரையும் நம், அனைவருக்கும் தெரியும். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான இவர் மீது, ஒரு முறை கூட்டத்தில் பங்கேற்க செல்லும் பொழுது, கேக்கினை அவருடைய முகத்தில் அடித்து விட்டனர். அவ்வளவு தான், அவருடையப் பாதுகாப்பு எவ்வளவு அதிகரிக்கப்பட்டு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள அனைத்துக் கண்ணாடிகளும், புல்லட் துளைக்காத கண்ணாடிகளால் ஆனவை. அந்த அலுவலகத்தில் கடுமையான சோதனைக்குப் பின்னரே, ஊழியர்கள் கூட அனுமதிக்கப்படுவர். இவர் எங்கு செல்கின்றார், என்ன செய்கின்றார் என இவரைப் பாதுகாக்க தனிப்படையே உள்ளது.
21ம் நூற்றாண்டில், யாராலும் மறக்க முடியாத ஒரு நபர் என்றால் அது இவர் தான். தெருவில் நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தவர்களை, பேஸ்புக்கில் பேச வைத்தவர். இவர் தான், பேஸ்புக்கின் ஓனர் ஆவார். இவருக்கு வழங்கும் பாதுகாப்பு மிக கடினமானதாகவே இருக்கும். பல கோடி ரூபாய் இவருடையப் பாதுகாப்பிற்காக, பயன்படுத்தப்படுகின்றது. மேலும், இவருடன் நல்ல திறமை வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாப்பு ஊழியர்களும், அதிகாரிகளும் இவருடன் இருப்பர். இவர் எங்கு சென்றாலும், அவர்களும் செல்வர். இவரை சிசிடிவி கேமிராக்கள், மற்றும் டிரோன்கள் மூலமும், இவரை இவருடைய தனிப்பட்ட சைபர் செக்யூரிட்டி குழுவும் கண்காணிக்கும்.
கம்யூனிச நாடான சீனாவின் அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு, பல விதமானப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அவருடைய கார் முதல் அணியும் உடை வரை, அனைத்துமே மிக கவனமாகப் பார்க்கப்படுகின்றன. தற்பொழுது, அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா வளர்ந்துள்ள நிலையில், அவருடையப் பாதுகாப்பு தனித்தன்மை வாய்ந்ததாக கருத்தப்படுகின்றது. இவர் எங்கு இருக்கிறார் என்பதைப் பாதுகாக்க, தாக்குதல் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், டிரோன்கள், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் என பல விதமான பாதுகாப்பு இவருக்கு வழங்கப்படுகின்றது. மேலும், மென்பொருள் பாதுகாப்பு எனும், சைபர் செக்யூரிட்டி அணியும் இவருடைய செயலை கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
சவுதி அரேபியாவின், பட்டத்து இளவரசரான இவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பும், மிக அதிகமான ஒன்று தான். துப்பாக்கி ஏந்திய காவலர்கள், பாரம்பரிய காவலர்கள், பரம்பரைக் காவலர்கள், சைபர் செக்யூரிட்டி என இவருக்கு தனி மரியாதை வழங்கப்படுகின்றது. உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிக முக்கியமானதாக கருதப்படும் நாடு என்பதால், அமெரிக்காவும் இவருக்குப் பாதுகாப்பு வழங்குகிறது என, தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும், அது எந்தளவு உண்மை என யாருக்கும் தெரியாது.
இங்கிலாந்து நாட்டின் மகாராணியான, எலிசபெத் மகாராணிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மிகவும் விஷேசமானது. அவருக்கென அனைத்துமே, தனியாக இருக்கும். அவர் அரண்மனை மீது, விமானங்கள் பறக்க வேண்டும் என்றால் கூட, அனுமதி வாங்கியிருப்பார்கள். இவருக்கு எல்லாவிதமான பாதுகாப்பும் வழங்கப்படுகின்றது என, ஒரே வரியில் கூறிவிட முடியும். ஏனெனில், இன்று வரை இவருக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என்பது பற்றியத் தகவல்கள் வெளிவந்ததில்லை. இருப்பினும், ஸ்காட்லாந்து யார்டும் இதில் ஈடுபடுவதாக, பேச்சுகள் அடிபடுகின்றன.
உலக கிறிஸ்தவர்களின் பொதுவானத் தலைவர்களாக, போப் பார்க்கப்படுகின்றார். தற்பொழுது உள்ள போப் பிரான்சிஸ்சிற்கும், உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
1506ம் ஆண்டு, போப் ஜூலியஸ் 2 தான் இவ்வளவு பாதுகாப்பினை போப் என்பவருக்கு வழங்க வேண்டும் என தீர்மானித்து, கடுமையான பாதுகாப்பினை உருவாக்கினார். அப்பொழுதில் இருந்து, இப்பொழுது வரை போப்பிற்கு ஸ்விட்சர்லாந்து இராணுவ வீரர்களே பாதுகாப்பு வழங்குகின்றனர். 19 முதல் 20 வயதுள்ள இளம் வாலிபர்கள், இவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக, பயிற்சி பெறுகின்றனர். பின்னர், அவர்கள் பணியில் அனுமதிக்கப்படுகின்றனர். பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும், மிக மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும் பாதுகாப்புப் பயிற்சிப் பெற்றவர்கள், இவர்கள் தான்.
இவரால் இன்னும், நிம்மதியாக தூங்க முடியாமல் உள்ளது அமெரிக்கா. மிசைல் மேன் என, அமெரிக்க அதிபர் டிரம்பால் விமர்ச்சிக்கப்பட்டவரை, பல முறைக் கொல்வதற்குச் சதி நடந்துள்ளது. மேலும், உடையில் இராசயனத்தைத் தடவி கொலை, தாக்குதல் மூலம் கொலை என இவரைப் பல முறை முயற்சி செய்தும் கொள்ள இயலவில்லை. காரணம், அந்த அளவு நுணுக்கமான பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. எப்பொழுதும், இவருடன் மிகவும் நேர்த்தியான பாதுகாவலர்கள் இருக்கின்றனர். இவருக்கு 360 டிகிரி பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இவர் உடை முதல் குடிக்கும் நீர் வரை அனைத்துமே, சோதிக்கப்பட்ட பின் அவரிடம் வழங்கப்படும்.
உலகையே ஆட்டி வைக்கும் அமெரிக்காவின் அதிபருக்கு, எவ்வளவு பாதுகாப்பு வழங்கப்படும் என, நீங்களே சற்று கற்பனை செய்யுங்கள். தனி விமானம், தனி ஹெலிகாப்டர், தனி கார் என அனைத்தும் தனித் தன்மை வாய்ந்தவை. அணு குண்டே வெடித்தாலும், அவருக்கு எதுவும் ஆகாத வகையில், பாதுகாப்பு அறை. குண்டு துளைக்காத உடை. ஏழடுக்குப் பாதுகாப்பு 1,500 காவலர்கள் என இவருக்கு 24 மணி நேரமும், தொடர் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. போதாதென்று, டிரம்ப் தன்னுடைய சொந்த செலவிலும் தனி பாதுகாப்பு வைத்திருக்கின்றார்.
சுமார் 2,000 முதல் 3,000 பாதுகாப்பு வீரர்கள் இவருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர். சோவியத் யூனியன் துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட பின், ரஷ்யாவின் செல்வாக்குக் குறைந்தது. இருப்பினும், அமெரிக்காவின் ஆஸ்தான போட்டியாளராக தொடர்ந்து, ரஷ்யா இருந்து வருகின்றது. அதிபர் மாளிகையில் பறக்கும் புறா முதல் எதற்குள் எதை வைத்து, இவருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர் என, அந்நாடு அதிபருக்கு மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு, மிகவும் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.