தற்பொழுது உலகில் உள்ள அனைவருமே, வீடியோ கேம் விளையாடுகின்றனர். 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள் வரை, அனைவருமே வீடியோ கேம் விளையாடுகின்றனர். ஒரு காலத்தில், மைதானத்திற்கு சென்று கை, கால் வலிக்க விளையாடிய விளையாட்டுக்கள் அனைத்துமே, தற்பொழுது, மொபைலிலும், வீடியோ கேமாகவும் வந்துவிட்டதால், அனைவருமே இதிலேயே விளையாடி மகிழ்கின்றனர். அவ்வாறு விளையாடும் வீடியோ கேம்களில், தரமான கேம்களைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த கேம் 2016ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வெளியானது. தற்பொழுது வரை இந்த கேம் முதலிடத்தில் உள்ளது. அந்த அளவிற்கு இந்த கேமினை மக்கள் விரும்பி வாங்கி விளையாடுகின்றனர். ஒரு சாதாரண சண்டைபோடுபவர் எப்படி வலிமைமிக்க தலைவன் ஆகிறான் என்பது தான் இந்தக் கேமின் கதை. இதில் அவர்கள் செய்துள்ள கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களமே, இந்தக் கேமின் வெற்றிக்குக் காரணம் என்றுக் கூறலாம். விமர்சகர்கள் மத்தியிலும், விளையாட்டாளர்கள் மத்தியிலும், இந்த கேம் நல்ல வரவேற்பைப் பெற்றது எனக் கூறலாம்.
இந்த கேம் 2016ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வெளியானது. யுபிசாப்ட் என்னும் நிறுவனம் வெளியிடும், இரண்டாவது கேம் ஆகும். இந்த கேமில் நாம் பலருடனும், தனியாகவும் விளையாடலாம். இந்த கேமே யுபிசாஃப்ட் நிறுவனத்தின் அதிக வருமானம் ஈட்டிய கேம் ஆகும்.
ஒரு தீவில் அல்லது மறைக்கப்பட்ட பகுதியில் உள்ள, புதிர்களை கண்டுபிடிக்கும் விதமாக, இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியான இந்த கேம், ஒரு 3டி வடிவ கேம் என்று கூறலாம். பசில் கேமாக உருவாக்கப்பட்டுள்ள இதில், மொத்தம் 650 பசில்கள் உள்ளன.
இந்த கேமினை ரோல்7 என்ற நிறுவனம் உருவாக்க, டிவால்வர் டிஜிட்டல் என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த கேம் 2015ம் ஆண்டு மே 14ம் தேதி வெளியானது. இது ஒரு சூட்டிங் கேம் ஆகும். ஒன்றும் அல்ல, எதிரிகளை வீழ்த்தி, எவ்வாறு உலகைக் காக்கிறான் கதாநாயகன் என்று, கதையை உருவாக்கியுள்ளனர். இந்தக் கேமும் பட்டையைக் கிளப்பும் வகையில், கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்டுள்ளது.
இது ஒரு ஆக்ஷன் அட்வென்ட்சர் கேம் ஆகும். இதுவும் எதிரிகளை வீழ்த்தி, எவ்வாறு உலகைக் காக்கின்றான் கதாநாயகன் என்ற புராணக் கதையையே, அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியான இந்தக் கேமில் கிராபிக்ஸ் பலமாக இருக்கும். பல விதமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, எவ்வாறு எதிரிகளை வெல்கிறோம் என்பதே இந்தக் கேமின் கதை.
இது ஒரு ஆக்ஷன் அட்வென்ட்சர் கேம் ஆகும். 2016ம் ஆண்டு வெளியான இந்த கேமினை, கேம்ப்போ சாண்ட்டோ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இது ஒரு சூட்டிங் கேம் ஆகும். இந்த கேமும் 2016ம் ஆண்டு வெளியானது. இதனை யுபிசாப்ட் நிறுவனமே வெளியிட்டது. இதனை விளையாடும் பலரும், இதன் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.
இது ஒரு சண்டைக் கேம் ஆகும். ஸ்டீரீட் ஃபைட் 4ம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தக் கேம் உருவாக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 20 லட்சம் பதிப்புகள் விற்றுள்ளன என்றால், நீங்களே இந்த கேமின் மதிப்பினைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த கேமில் பல மார்வெல் ஹீரோக்கள் உள்ளனர். இந்த கேமினை மார்வெல் ஹீரோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கேமினை குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி விளையாடுவர். ஏனெனில், அந்த அளவிற்கு இந்தக் கேம் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது.