ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு நாட்டிற்கு அல்லது கண்டம் விட்டு, கண்டம் செல்வதற்கு விமானம் ஒரு முக்கிய வாகனமாகப் பயன்பட்டு வருகிறது. விமானப் போக்குவரத்து வளர்ச்சி அடைந்து வரும் வேகத்தில், விமான விபத்துக்களும், அதிகரித்தக் கொண்டே உள்ளன. மிக மோசமான வானிலை, ஓட்டுநரின் பிழைகள் மற்றும் விமானத்தில் ஏற்படும் பழுது காரணமாகவே, விபத்துகள் பெரும்பாலும் நிகழ்கின்றன.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால், ஒரே நேரத்தில் பல நூறு பேர் இந்த விபத்துக்களால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன எனினும், ஒரு சில விபத்துக்கள் ஆராத வடுவை மனதில் ஏற்படுத்தி விடுகின்றன.
இந்த விபத்துக்களில் இருந்து, நாங்கள் போயிங் வகை விமானங்களே, பெரும்பாலும் விபத்துக்களில் ஈடுபட்டிருப்பதை அடையாளம் கண்டுள்ளோம். இந்தக் கட்டுரையில், விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஏற்பட்ட, மிக மோசமான பத்து விமான விபத்துக்களைப் பட்டியலிட்டுள்ளோம்.இராணுவ விமான விபத்துக்கள், உலகில் ஒவ்வொரு வாரமும் நிகழ்கின்றன மேலும், இவைப் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்துவதில்லை.எனவே, இராணுவ விபத்துக்களை இங்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
பனிப் போர்க் காலத்தில், இந்த விமானம் சோவியத் இராணுவத்தால் சுடப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பல அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும், இது வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகத் தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில், ஜார்ஜியாவின் பிரதிநிதி லாரி மெக்டொனால்ட் உட்பட 269 பேர் பயணிகள் உயிரிழந்தனர்.
விமானம்:-Boing 747-230Bஇந்த விபத்து, தரக்குறைவான அல்லது சரியான விமார பராமரிப்பில்லாத்தால், ஏற்பட்ட ஒரு விபத்தாகும். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, இடது பக்க இயந்திரத்தின் பிரிவானது பிரிந்து, இறக்கையின் நுனியில் சுழன்றது. இதன் காரணமாக, விமானம் அதன் காற்றியக்கவியலை இழந்ததன் விளைவாக, இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் 273 நபர்கள் உயிரிழந்தனர்.
விமானம்:-மெக்டோனல் டக்ளஸ் DC-10-10இது ஏர்பஸ் வரலாற்றில் ஏற்பட்ட, மிகப் பெரிய விமான விபத்து ஆகும். துரதிருஷ்டவசமாக, விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். இந்தப் பயணிகள் விமானம், தெஹ்ரானில் இருந்து துபாய் வரை பயணிப்பதற்கு திட்டமிடப்பட்டு பறந்த்து. ஆனால், இந்த விமானம் USS வின்சென்ஸ் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.இது அமெரிக்கா செய்த பெரிய தவறுகளில் ஒன்றாகும்.
விமானம்:-ஏர்பஸ் A300B2-203இது ஒரு மோசமான மற்றும் மறக்க முடியாத விபத்துக்களில் ஒன்றாகும். இந்த விமானத்தின் இயந்திரம் செயலிழந்ததால், இந்த விமானம் திறந்த வெளியில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு சந்தையில் மோதி விழுந்தது. இந்த விபத்தில், சந்தையில் இருந்த பெரும்பாலான மக்கள் மற்றும் வாகனங்கள் இழப்பைச் சந்தித்தனர். இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் ஒரு சில விமான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
விமானம்:-அன்டோனோவ் An-32Bமிக அதிகமாக, விமான போக்குவரத்து துறையைப் பயன்படுத்தும் நாடாக சவுதி அரேபியா உள்ளது. இந்த விபத்து, அதன் விமான போக்குவரத்து துறையில் இன்றும், கருப்பு புள்ளியாகவேப் பார்க்கப்படுகிறது. சவூதி விமானம் 163, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கயாட்-இ-ஆஸாம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சவுதி அரேபியாயாவின் ஜெட்டாவிலுள்ள, ஜெட்டா சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றது.விமாத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தே, இதன் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில், 287 பயணிகள் மற்றும் 14 குழு உறுப்பினர்கள் இறந்துள்ளனர்.
விமானம்:-லாக்ஹீட் எல் 1011-200 ட்ரைஸ்டார்2003 ஆம் ஆண்டு 19 ஆம் தேதி ஈரானில், இந்த விபத்து நடந்தது. மோசமான வானிலை காரணமாக, பைலட் எடுத்த தவறான முடிவே இந்த விபத்துக்கு காரணம், என இவ்விபத்தை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர். ஈரானில் உள்ள பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றான, "அபூ-பாக் பிரிகேட்ஸ்" இந்த விபத்துக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்த விபத்தில் 200 பேர் இறந்தனர்.
விமானம்:-IIyushin II-76MDபுறப்பட்ட பத்தாவது நிமிடத்திலயே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் பாரிஸுக்கு வெளியே அமைந்துள்ள எர்மெனோவில் வனத்தில் மோதியதே, விபத்துக்கான காரணம் ஆகும். இந்த விபத்தில், துரதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர்.
விமானம்:-டிசி 10-10 மெக்டோனல் டக்ளஸ்இது இரண்டு விமானங்களுக்கு இடையே, ஏற்பட்ட விபத்து ஆகும். இதில் போயிங் 747-100Bம், IIyushin II-76 மோதிக் கொண்டன. இது இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்து ஆகும். இதுபோன்ற விபத்தை, இந்தியா இதற்கு முன் பார்த்ததில்லை. இந்த விபத்தின் முக்கிய காரணமாக, கஜகஸ்தான் விமான விமானிப் பார்க்கப்படுகிறார்.
விமானம்:-Boing 747-100B & IIyushin II-76இது ஜப்பானில் ஏற்பட்ட, மிகப் பெரிய விமான விபத்தாகும். இவ்விபத்தில், Boing 747Sr அதன் கட்டுப்பாட்டை இழந்ததன் விளைவாக, அதன் கட்டமைப்பு தோல்வியடைந்தது. மேலும், வெடித்தச் சிதறியதது. இந்த விமானத்தில் இருந்த விமானிகள், அவசரத் தகவலை டோக்கியோவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர். கட்டுப்பாடு அறை, அவசர தரையிறக்கத்துக்கு இட ஒதுக்கீடு செய்வதற்குள் துரதிருஷ்டவசமாக, இந்த விமானம் மலை மீது மோதி வெடித்தச் சிதறியது.
விமானம்:-Boing 747SR-146இது விமான தொழில் துறையில் ஏற்பட்ட, மறக்க முடியாத பேரழிவு ஆகும். டென்ரைஃப் விமான நிலையத்தில், பான் அன் 747 விமானம் போயிங் 747னுடன் மோதியது. இந்த விபத்துக்கு, விமான நிலைய மையத்தால் பல காரணங்கள் கூறப்பட்டாலும், பெரிய அளவிலான மூடுபனி, ஓடுபாதை ஊடுருவல், மற்றும் விமான இயந்திரத்தில் ஏற்பட்டக் கோளாறு ஆகியவற்றால் தான் நிகழ்ந்தாகவே மக்கள் நம்புகின்றனர்.
விமானம்:-போயிங் 747-206B, பான் ஆம் போயிங் 747-121