நாம் அனைவருமே ஏதாவது, ஒரு விதத்தில் இந்த வெப்சைட்டுகளைப் பயன்படுத்தி வருகிறோம். புதிய படங்களை டவுன்லோட் செய்ய, சாப்ட்வேர்களை இலவசமாக டவுன்லோட் செய்ய என இதனைப் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வெப்சைட்டுகள் உண்மையில் மிக ஆபத்தானவை என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். இந்த வெப்சைட்டுகளில் உள்ள ஃபைல்களை டவுன்லோட் செய்வதற்கு பெரும்பாலும், யூடொரன்ட் என்ற சாப்ட்வேரையே பயன்படுத்துகின்றனர். இந்த சாப்ட்வேர், ஒரு ஃபைலை டவுன்லோட் செய்யும் பொழுது பல நூறு ரூபாய்களை அந்த வெப்சைட்டிற்கு சம்பாதித்துத் தந்துவிடுகிறது. மேலும், இதில் எவ்வித கடின உழைப்பும் தேவையில்லை என்பதால், இத்தொழிலில் பல நூறு பேர் சட்டவிரோதமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பல வெப்சைட்டுகள் பிட்காயின் மைனிங்கில் ஈடுபட்டுள்ளன. நாம் அந்த வெப்சைட்டில் டவுன்லோட் செய்யும் பொழுது, அவர்கள் நமக்குத் தெரியாமலேயே, நம்முடையக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடைந்துவிடுகின்றனர். இதனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது.
மேலும், பாப்அப் விளம்பரங்களை வைத்தும் சம்பாதிக்கின்றனர். இதனால், கடினமாக உழைத்து படத்தையும், சாப்ட்வேர்களையும் உருவாக்கும் அப்பாவிகள் நஷ்டம் அடைகின்றனர். பல நாடுகள் இத்தகைய வெப்சைட்டுகளை நடத்துவதும், அவைகளைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதமானது என அறிவித்தாலும், இதனைப் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனக் கூறலாம்.