86,500 அபராதம் கட்டிய வாகன ஓட்டுநர்! மக்களே விதிகளைப் பின்பற்றுங்கள்!

09 September 2019 அரசியல்
car.jpg

இதுவரை 70,000 விதிக்கப்பட்டிருந்த அபராதம் மட்டுமே, அதிகபட்ச அபராதமாக இந்த மாதம் இருந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது, 86,500 ரூபாயை போக்குவரத்துக் காவலர்கள், அபராதமாக விதித்து சாதனைப் படைத்துள்ளனர்.

ஒடிஷாவின் சாம்பல்பூர் பகுதியில், வாகனம் ஓட்டி வந்த நாகாலந்தினைச் சேர்ந்தவருக்கு 86,500 ரூபாயை அபராதமாக, விதித்தது காவல்துறை. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கையாளர்களுக்கான நோட்டீசில், பொது அபராதமாக 500 ரூபாயும், தகுதியற்றவை ஓட்ட வைத்ததற்காக 5,000 ரூபாய், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 5,000 ரூபாய், அதிகபட்சமாக எடையை வாகனத்தில் எடுத்துச் சென்றால், 56,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பபட்டது. மற்றும் வாகனத்தின் அளவினை விட உள்ளிருந்து பொருட்களின் அளவு அதிகமாக இருந்ததால், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால், டிரக் டிரைவர் வேறு வழியின்றி, அபராதம் செலுத்தினார். தொடர்ந்து, கனரக வாகனங்கள், பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிகப்படுவதால், ஓட்டுநர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

HOT NEWS