ஜியோ மற்றும் ஏர்டெல் குழாயடி சண்டை! முற்றுப்புள்ளி வைத்த டிராய்!

03 November 2019 தொழில்நுட்பம்
trai.jpg

ஆனாலும் இந்த ஜியோ ஆரம்பித்ததில் இருந்து, யார் எப்படியோ தெரியவில்லை. இந்த டிராய் அமைப்பு மட்டும், படாதபாடு பட்டுவருகின்றது.

இலவச இணைப்பு, இலவச நெட், இலவச தொலைத்தொடர்பு வசதி என ஜியோ, தன் பயனர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. இதனால், இந்தியாவில் மிகக் குறைந்த காலத்தில், அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியது. தற்பொழுது வரை, சுமார் 25 கோடி பேர் ஜியோ வழங்கும் தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களுடைய இந்த சலுகைகளால், ஆடிப்போன மற்ற நிறுவனங்கள் வேறு வழியின்றி, மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஐடியோ போன்ற நிறுவனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஐடியா நிறுவனம் கைமாறியது. ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனம், ரிசார்ஜ் முதல் அனைத்து விலைகளையும் அதிரடியாகக் குறைத்தது. மேலும், பல இலவச சலுகைகளை வழங்கி ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்ள போராடியது. இந்நிலையில், நிமிடத்திற்கு ஆறு பைசா வசூலிக்கப்பட உள்ளது என ஜியோ நிறுவனம் கூறியது.

அது மட்டுமின்றி, ஜியோவில் இருந்து, மற்ற நிறுவன எண்களுக்கு போன் செய்தால், 20 வினாடி மட்டுமே ரிங் போகும் என அறிவித்தது. இதனால், கடுப்பான ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் ரிங் ஆகும் நேரத்தினை 45 வினாடிகளில் இருந்து 25 வினாடிகளாக குறைத்தனர்.

இந்தப் பஞ்சாயத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, இதில் டிராய் நிறுவனம் நுழைந்தது. அது தற்பொழுது அனைத்து நிறுவனங்களும், சுமார் 30 வினாடிகள் செல்போன்களுக்கு ரிங் போக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், லேண்ட்லைன் தொலைபேசிகளில், சுமார் ஒரு நிமிடம் வரை ரிங் போக வேண்டும் எனவும் நிர்ணயித்துள்ளது.

HOT NEWS