மொபைல் எண்களை போர்ட் செய்ய புதிய விதிகளை அமல்படுத்திய டிராய்!

17 December 2019 தொழில்நுட்பம்
mobile3.jpg

மொபைல் எண்களை போர்ட் செய்யும் வசதியினை, டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆஃப் இந்தியா அறிமுகம் செய்தது. இதன் மூலம், ஒரு நபர் தான் இருக்கும் ஒரு நிறுவனத்தின் சேவையில் இருந்து, மொபைல் எண்ணை மாற்றாமல், மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள இயலும்.

உதாரணமாக, ஏர்டெல் பயன்படுத்தும் நபரின் எண் 9876543210 என்றால், அவர் தன்னுடைய 98765443210 எண்னை மாற்றாமல், ஜியோ அல்லது பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ள இயலும்.

இது வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. இந்நிலையில் அதில், புதிய விதிகளை தற்பொழுது டிராய் அமல்படுத்தி உள்ளது. இந்த விதிகள் 16-11-2019 முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

அதன் படி, தகுதியுள்ள நபர்களே, யுனிக் போர்டிங் கோடினை உருவாக்க இயலும். உள்ளூரில் உள்ள நிறுவனம் என்றால் மூன்று நாட்களுக்கும், அதே தேவைப்படுகின்ற நிறுவனம் வெளியூரில் இருந்து ஐந்து நாட்களுக்கும் போர்ட் செய்யப்படும்.

யூபிசி கோடானாது வெறும் நான்கு நாட்களுக்கு மட்டுமே, செல்லுபடி ஆகும். ஆனால், ஜம்மூ-காஷ்மீர், அஸ்ஸாம், வட கிழக்கு மாநிலங்களில் முப்பது நாட்களுக்கு இந்த யூபிசி கோடானது செல்லுபடி ஆகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த யூபிசி கோடானது, சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டருக்கே அனுப்பப்படும். கார்ப்பரேட் நிறுவனம், தகுந்த கடிதம் மற்றும் வாக்குறுதி அளித்தப் பின்னர் தான், ஆப்பரேட்டரை மாற்ற முடியும்.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி திட்டத்தின் பொழுது, பயனர்கள் தங்களுடைய அடையாள அட்டையின் நகலினை சமர்பிக்க வேண்டும். போஸ்ட்-பெய்ட் பயனர்கள், பழையப் பாக்கியினை செலுத்தியப் பின்னரே நிறுவனத்தினை மாற்ற இயலும்.

தன்னுடைய பயன்படுத்தும் நிறுவனத்தினை மாற்ற விரும்புபவர்கள், போர்ட் ஸ்பேஸ் தன்னுடைய பத்து இலக்க எண்ணினை, 1900 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அப்பொழுது தான், அந்த மொபைலுக்கு போர்ட் செய்வதற்குரிய யூபிசி கோடானது வரும். அந்தக் கோடானது, எத்தனை நாட்களுக்கு செல்லுபடி ஆகும் எனவும், அந்த எஸ்எம்எஸ் இல் குறிப்பிடப்பட்டும் இருக்கும்.

இவ்வளவு விஷயங்களையும், தற்பொழுது டிராய் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

HOT NEWS