அவுரங்காபாத் ரயில் ஏறி விபத்து! 16 பேர் பலி!

08 May 2020 அரசியல்
aurangabadaccident.jpg

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது ரயில் ஏறியதில், 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில் தற்பொழுது நாடு தழுவிய ஊரடங்கானது, அமல்படுத்தப்பட்டு உள்ளது. மே-17ம் தேதி வரை, இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப இயலாமல் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இதனால், பலரும் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே தங்களுடைய ஊருக்குச் செல்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு 21 புலம்பெயரும் தொழிலாளர்கள், நடைபயணமாக சென்றனர். ரயில் தண்டவாளத்தில் அவர்கள் நடந்து சென்றுள்ளனர். நேற்று இரவு உறங்க வேண்டும் என்பதற்காக, ரயில் தண்டவாளத்திலேயே உறங்கி உள்ளனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால், ரயில்கள் இயக்கப்படாது என்ற நம்பிக்கையில் அவர்கள் தூங்கியிருக்கலாம் என்றுக் கூறப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் இன்று காலை 5.15 மணியளவில், அவுரங்காபாத் பகுதியில், பத்னாபூர் மற்றும் கர்மாத் ரயில் நிலையத்திற்கு இடையில், 360 கிலோமீட்டர் வேகத்தில் வந்த சரக்கு ரயில், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது.

இதனை அப்பொழுது தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியுள்ளனர். அவர்கள் தண்டவாளத்தில் படுத்திருப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர்கள், அதனை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறி விட்டது. இந்த விபத்தால், 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள், பலத்த காயம் அடைந்துள்ளதால், சிகிச்சைக்காக அவுரங்காபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு தன்னுடைய இரங்கலை, இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

HOT NEWS