ஜூன் 30ம் தேதி வரை ரயில் கிடையாது? டிக்கெட்கள் ரத்து!

15 May 2020 அரசியல்
irctcrails.jpg

வருகின்ற ஜூன் 30ம் தேதி வரைக்கும் பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட்களை ரத்து செய்துள்ளது இந்திய இரயில்வே.

மே ஒன்றாம் தேதி முதல், புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களானது அனைத்து மாநிலங்களில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், மே 12ம் தேதி முதல், டெல்லியில் இருந்து, அனைத்து மாநிலங்களுக்கும் 15 சிறப்பு ரயில்களை இயக்க, இந்தியன் ரயில்வே அனுமதித்தது.

இதன் மூலம், பல புலம்பெயரும் தொழிலாளர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில், ஜூன் 30ம் தேதி வரைக்கும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம், டிக்கெட் புக்கிங் நடைபெற்றது. அதில் பல லட்சம் பேர், தங்களுடைய டிக்கெட்டுகளைப் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் வருகின்ற மே-17ம் தேதிக்குப் பிறகும், ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

இதனால், ஜூன் 30ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து ஐஆர்சிடிசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை புக் செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகள் அனைத்தும், ரத்து செய்யப்படுகின்றன. மேலும், ரத்து செய்யப்பட்டு உள்ள டிக்கெட்டுகளின் பணமானது முழுமையாக திருப்பித் தரப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS