தற்பொழுது விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக இருக்கும் டிஆர், விரைவில் ஆன்மீகத்திற்குச் செல்ல இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
பாஜக கட்சியில் அதிக திரைப் பிரபலங்கள் தினமும் சேர்ந்த வண்ணம் உள்ளனர். குஷ்பு தற்பொழுது அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். விரைவில், நடிகர் விஷால், சரத் குமார், ராதிகா உள்ளிட்டோரும் அந்தக் கட்சியில் இணைய உள்ளார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமைக் கொண்ட டி ராஜேந்தர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், திரையறங்குகள் டிக்கெட் விலையினை கண்டிப்பாக குறைக்க வேண்டும் எனவும், 50 ரூபாய்க்கு டிக்கெட் விலையினை குறைக்க வேண்டும் எனவும், அப்பொழுது தான், பாமர மக்களும் திரையறங்கிற்கு வருவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். தற்பொழுது ஆன்மீகத்தினை நோக்கி தாம் செல்வதாகவும், அதனால் நிலமைக்கு ஏற்ப தன்னுடைய விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் பதவியினைக் கூட ராஜினாமா செய்வேன் என்று, அவர் கூறியுள்ளார்.
அவர் ஆன்மீகத்திற்கு செல்ல உள்ளேன் எனக் கூறியுள்ளதால், அவர் பாஜகவில் இணைய உள்ளார் எனப் பலரும் தங்களுடையக் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.