மே 17க்குப் பிறகு போக்குவரத்து சேவை?

15 May 2020 அரசியல்
aircraftmissing.jpg

தற்பொழுது மே17க்குப் பிறகும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என, பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல இயலாமல் கஷ்டப்படுகின்றனர். மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தானது, முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சரக்கு இரயில்கள் மட்டும், ஒரு சிலக் குறிப்பிட்ட வழித்தடங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதால், பொதுமக்களால் வெளியில் பயணங்களை மேற்கொள்ள இயலாது.

இந்நிலையில், இந்த நான்காவது ஊரடங்கில், ஒரு சில போக்குவரத்துத் தளர்வுகள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஊரடங்கின் பொழுது, பச்சை மண்டலங்களில் சகஜமான போக்குவரத்திற்கு அனுமதி கிடைக்கும் என்றுக் கூறப்படுகின்றது. மேலும், ரயில்களும், விமானங்களும் ஒரு சிலக் குறிப்பிட்ட ஊர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளன.

இந்த ஊரடங்கின் பொழுது, பொதுப் போக்குவரத்தில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பேருந்துகளில் அதிகபட்சமாக 25 பேர் பயணிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில ஊர்களுக்கு விமான சேவை, ரயில் சேவையும் அனுமதிக்கப்படலாம் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS