முத்தலாக் மசோதா நிறைவேற்றம்! மோடி பெருமிதம்!

30 July 2019 அரசியல்
tripletalaq.jpg

முத்தலாக் மசோதா இன்று முழுமையாக நிறைவேறியது. இதனை பிரதமர் மோடி பெருமிதமாக டிவீட் செய்துள்ளார்.

இந்தியா முழுவதும், பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட முத்தலாக் மசோதா, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. ரவிஷங்கர் பிரசாத் காலையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீது காலையில் இருந்து, காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இதற்கு, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுமே, தங்களுடைய எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். இதனிடையே இன்று மாலை ஆறு மணிக்கு இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் வாக்குச்சீட்டு முறைப் பின்பற்றப்பட்டது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 84 பேரும், எதிராக 99 பேரும் வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பில் 29 பேர் கலந்து கொள்ளாமல், வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மையான வாக்குகள் இந்த மசோதாவிற்கு கிடைத்துவிட்டதால், இந்த மசோதா நிறைவேறுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இதன் காரணமாக, முத்தலாக் மசோதா நிறைவேறியது. இன்னும் குடியரசுத் தலைவரின் கையெழுத்து மட்டுமே பாக்கி. அவர் கையெழுத்து இட்டு ஒப்புதல் அளித்தவுடன், அந்த மசோதா அமலுக்கு வந்துவிடும்.

இந்நிலையில், இது குறித்து டிவீட் செய்துள்ள மோடி, முத்தலாக் மசோதா நிறைவேறியதன் மூலம், இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும், முத்தலாக் முறையால் இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இது முற்றுப்புள்ளியாக அமையும் எனவும், இதற்கு ஆதரவு அளித்த அனைத்து மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றிகள் எனவும், இந்த முத்தலாக் தடை மசோதாவால், இஸ்லாமியப் பெண்கள் மேன்மைக்கும், பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS