பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு, தமிழக டிவி தொலைக்காட்சிகளில் பல புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில், தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் அதிகளவில் பார்க்கப்பட்ட திரைப்படமாக உள்ளது என, இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்கள் அளவிடும் அமைப்பான, பார்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த பொங்கல் திருவிழாவிற்கு, பிகில் திரைப்படத்தினை சன் டிவி ஒளிபரப்பியது. அந்தப் படத்தினை உலகளவில் சுமார் 16.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தினை 14.8 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் திரைப்படத்தினை, 9.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தின சிறப்புத் திரைப்படமாக சர்கார் திரைப்படத்தினை 18.4 மில்லியன் பார்வையாளர்கள் ஏற்கனவே பார்த்து இருந்தது தான், மாபெரும் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.