குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் முன்னாள் சென்ற டிரக் மீது, பின்னால் வந்த டிரக் மோதி 11 பேர் பலியாகி உள்ளனர். இதில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் அதிகாலை 2.45 மணியளவில், வகோடியா சாலைப் பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் மினி ட்ரக்கில் ஏறி, சூரத் நகரில் உள்ள பாவகத் கோயிலுக்குச் சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அதற்குப் பின்னால் வந்த டிரக்கானது, இந்த டிரக்கின் மீது மோதியது. அதில், மினி ட்ரக்கானது நிலைக் குலைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்த டிரக் சீர் குலைந்தது. அதில் பயணம் செய்தவர்களில், சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகி விட்டனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்ட போலீசாரும், அப்பகுதியில் சென்றவர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி, ஒட்டு மொத்த இந்தியாவினையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.