என்னாங்கடி இது கொடுமையா இருக்கு? டிரம்பும்-கிம்மும் செய்த லூட்டிகள்!

29 June 2019 அரசியல்
trump-kim.jpg

கீரியும், பாம்புமாக இருந்து வந்த வட கொரியாவும், அமெரிக்காவும் இப்ப ரொம்ப ராசி ஆகிட்டாங்க. எப்படின்னு யோசிக்கிறீங்கதானே! இந்த இரு நாடுகளுக்கு இடையில், நிலவியப் பதற்றத்தைப் பார்த்த உலக அரசியல் நிபுணர்கள், இந்த இரு நாடுகளால் மூன்றாம் உலகப்போர் வரும் என நம்பினர். ஆனால், அவர்களுடைய நம்பிக்கையில், இரு நாடுகளும் இணைந்து, மண்ணை அள்ளிப் போட்டன.

கடந்து ஆண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜிம் உன் ஆகியோர் சந்தித்து, பரஸ்பர மரியாதையை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வட கொரியா மீதான பலத் தடைகள் நீக்கப்பட்டன. ஆனாலும், பொருளாதாரத் தடை தொடர்ந்து வருகிறது. தற்பொழுது வடகொரியா அணு ஆயுத சோதனையையும், சோதனை செய்யும் இடங்களையும் கைவிட்டு விட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது ஜி-20 உச்சிமாநாட்டில், சர்வதேசத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம்மும் அடித்த லூட்டி இருக்கே, அய்யய்யோ! நீங்களே பாருங்க! ரோட்டில் நடக்கும் பொழுது, டிரம்ப் அமெரிக்க டாலர்களை வைத்து, வீசிக் கொள்கிறார். அதிபர் கிம்மும், டிரம்பும் இணைந்து பொது மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இருவரும் இணைந்து உணவு உண்கின்றனர். இருவரும் ஜப்பானிய இசைக்கு நடனமாடுகின்றனர். இந்த வீடியோ தற்பொழுது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

video courtesy:abc news usa

HOT NEWS