நம்பிக்கையில்லா தீர்மானம்! ட்ரெம்ப் வெற்றி! அதிபர் பதவி தப்பியது!

06 February 2020 அரசியல்
trump2.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான, நம்பிக்கையில்லா தீர்மானம், தோல்வியில் முடிந்தது.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம், தேர்தல் நடைபெற உள்ளது. அதில், குடியரசுக் கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இதில், ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன், உக்ரைன் நாட்டில் உள்ள புரிஸ்மா ஹோல்டிங் என்ற நிறுவனத்தில், முக்கியப் பதவியில் இருந்தார். அவர் பதவியில் இருந்த பொழுது, ஊழல் பிரச்சனை ஏற்பட்டது என, உக்ரைன் அதிபருக்கு போன் செய்த டிரம்ப், உக்ரைன் அதிபர் வ்லோடிமிர் செலன்ஸ்கிக்கிற்கு அழுத்தம் கொடுத்ததாக, புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் அமெரிக்க செனட் சபையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், கடந்த டிசம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், டிரம்ப்பிற்கு ஆதரவாக 198 வாக்குகளும், எதிராக 229 வாக்குகளும் பதிவாகின. இதனால், டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்க செனட் சபையிலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் பதிவாகின. இந்த செனட் சபையில், டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் அதிகம் என்பதால், டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அதிக வாக்குகள் பதிவானது. இதனையடுத்து, டொனால்ட் டிரம்ப் மீதான, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் காரணமாக, டொனால்ட் ட்ரம்பின் பதவி தப்பியதோடு மட்டுமல்லாமல், வருகின்ற அதிபர் தேர்தலிலும் அவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அமெரிக்காவில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தினை எதிர்கொண்ட மூன்றாவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS