பதவி விலகுவாரா டிரம்ப்? ஆப்பு வைத்த அமைச்சரவை!

19 December 2019 அரசியல்
trumpsign.jpg

உக்ரைன் அதிபருக்கு போன் செய்து வரும் தேர்தலில் உதவ அழைத்தார் என டிரம்ப் மீது, கடந்த மாதம் பகிரங்கமான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்கத்தினை எதிர் நோக்க உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கும், முன்னாள் துணை அதிபரின் மகன் ஜோ பிடனின் மகனுக்கும் இடையில், கடும் போட்டி நிலவி வருகின்றது. இதற்காக, உக்ரைனிற்கு போன் செய்த டிரம்ப் ஜோ பிடன் மகனுக்கு எதிராக வழக்குத் தொடரக் கோரியுள்ளார். அவ்வாறு வழக்குத் தொடர்ந்தால், உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ராணுவ உதவி தருவதாக, உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு வாக்களித்துள்ளார்.

இந்த போன் உரையாடல் லீக்கானதாகவும், அதனை மர்ம நபர் ஒருவர் அமெரிக்க செனட் சபைக்கு அனுப்பியும் வைத்து இருந்திருக்கின்றார். இதனை அடுத்து, டிரம்ப் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வந்த்தனர்.

இது குறித்து அமெரிக்காவின் இரு அவைகளிலும், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இருப்பினும், இது தனக்கு எதிரான பழி வாங்கும் செயல் என அமெரிக்க அதிபர் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இதனிடையே, இன்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில், டிரம்ப்பினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதில், டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது அமெரிக்க அதிபருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவின் செனட் சபையிலும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அதிலும், டிரம்பிற்கு எதிரான தீர்மானம் வெற்றிப் பெற்றால் மட்டுமே அவர் பதவி விலக நேரிடும். ஆனால், அந்த செனட் சபையில் டிரம்பின் கட்சியினரே பதவியில் உள்ளனர். இதனால், டிரம்பின் பதவி தப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகாரத் துஷ்ப்ரயோகத்தால், பதவி நீக்க தீர்மானத்தினை எதிர்கொள்ளும் மூன்றாவது அமெரிக்க அதிபராக டிரம்ப் இருக்கின்றார்.

HOT NEWS