அமெரிக்கப் படகுகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில், ஈரான் படகுகள் சுற்றினால், அதனை சுட்டுத் தள்ளுங்கள் டொனாலாட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வளைகுடா கடல்பகுதியில், அமெரிக்காவின் கடற்படைப் பிரிவு ஒன்றானது நிற்கின்றது. அங்கு, பல அமெரிக்கப் படை கப்பல்கள் இருக்கின்றன. இந்நிலையில், அப்பகுதிகளில் ஈரான் நாட்டு கடற்படை கப்பல்கள், துப்பாக்கியுடன் வலம் வருவதாகவும், அவை அமெரிக்கக் கப்பற்படைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
இது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். அதில், அமெரிக்க கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக துப்பாக்கிகளுடன் திரியும் ஈரான் கப்பல்களை, சுட்டுத் தள்ள உத்தரவிட்டுள்ளேன் என, பதிவிட்டுள்ளார்.
அவ்வாறு, ஈரான் கப்பல்களை சுட்டுத் தள்ளும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையில் போர் மூளும் வாய்ப்பு உள்ளதாக, அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.