சீனாவின் அதிக வரி விதிக்க திட்டம்! டிரம்ப் சூசகம்!

03 May 2020 அரசியல்
donaldtrumptax.jpg

சீனாவின் மீது, அதிக வரியினை விதிக்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாகக் கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும், கொரோனா வைரஸானது பரவி உள்ளது. இதனால், முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம் பேர் மரணமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால், அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இருப்பினும், பொதுமக்கள் இந்த ஊரடங்கினை மதிக்காமல், பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள், வர்த்தகம் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தொடர்ந்து சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற டிரம்ப், சீனாவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றார். சீனாவில் உள்ள ஆய்வுக் கூடத்தில் இருந்து தான், உருவாகி உள்ளது என்று குற்றம் சாட்டி வருகின்றார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பொருளாதாரம் தற்பொழுது பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறி வருகின்றார்.

அவர் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது, அமெரிக்காவின் பலமே அதன் டாலர் தான். அமெரிக்க டாலர் தற்பொழுது மிகவும் வலிமையாக உள்ளது. இதனால், நம்முடையப் பொருளாதாரத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு சீனா தான் காரணம். எனவே, சீனாவின் பொருட்கள் மீதும், சீனாவிற்கு அனுப்பப்படும் பொருட்கள் மீதும் அதிக வரிகள் விதிக்க திட்டமிட்டு உள்ளார். இதன் மூலம், சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதிக்க இயலும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS