சீன விஷயத்தில் மோடி நல்ல மனநிலையில் இல்லை! டிரம்ப் பேச்சு!

29 May 2020 அரசியல்
donaldtrumpfun.jpg

சீன விஷயத்தில், இந்தியப் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார். அவர் பேசுகையில், இந்தியா மற்றும் சீனா இரண்டு நாடுகளுமே, 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாபெரும் நாடுகள். அதிக இராணுவ பலத்தினைக் கொண்டுள்ளன. அவைகள் தற்பொழுது, தங்களுடையப் படைகளை எல்லையில் நிறுத்தி உள்ளன.

இது குறித்து, இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசினேன். அவர் மிகச் சிறந்த மனிதர். நல்ல நண்பர். அவர், தற்பொழுது நல்ல மனநிலையில் இல்லை. இந்தியாவும் நல்ல மனநிலையில் இல்லை. அதே போல் தான், சீனாவும் நல்ல மனநிலையில் இல்லை.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவுகின்ற பிரச்சனையில், மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க தயாராக இருப்பதாக, அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே, காஷ்மீர் பிரச்சனையில், பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக, டிரம்ப் கூறியிருந்தார். அதனை இந்திய அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், தற்பொழுது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனை, அமெரிக்க மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உள்நாட்டிலேயே, ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ள நிலையில், ஏன் இவர் மற்ற நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைக்கின்றார் என, சமூக வலைதளங்களில் ஏளனமாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

HOT NEWS