நிதியினை நிறுத்திய டிரம்ப்! சண்டை முற்றுகின்றது! ஐநா கவலை!

15 April 2020 அரசியல்
trumpfunding.jpg

உலக சுகாதார மையத்திற்கு வழங்கி வந்த நிதியினை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தினார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த நோயினால், அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அந்த நாட்டில் மட்டும், சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர், இவர்களில், 20,000க்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவின் நிலை குறித்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றார். அவர் நேற்றுப் பேசுகையில், உலக சுகாதார மையத்திற்கு வழங்கி வந்த நிதியுதவியினை நிறுத்துவதாக, அறிவித்தார்.

ஏற்கனவே, உலக சுகாதார மையத்திற்கு வழங்குவதாக இருந்தப் பணத்தினை நிறுத்தப் போவதாக கூறியிருந்தார் ட்ரம்ப். உலக சுகாதார மையம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை சரியாக வழிநடத்தத் தவறி விட்டதாகவும், அது சீனாவின் கைப்பொம்மையாக செயல்படுதவதாகவும் குற்றம் சாட்டினார். மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது என தாம் கூறியதாகவும், ஆனால், அதனை உலக சுகாதார மையம் மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், தான் சொல்வதுப் போலத் தான் இது நடைபெறுகின்றது என்று வேதனைத் தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு, தற்பொழுது அந்த அமைப்பிற்கு வழங்கி வந்த பண உதவியினை அதிபர் ட்ரம்ப் நிறுத்தி உள்ளார். இதற்கு, ஐநா சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.

HOT NEWS