பல்லாயிரம் கோடிகளில் ஒப்பந்தம்! டிரம்ப் வருகையின் பொழுது ஏற்பட உள்ளது!

15 February 2020 அரசியல்
moditrump.jpg

வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வருகைத் தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருகையின் பொழுது, பல இராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த இரண்டு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பின் பொழுது, சுமார் 18,500 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்தியாவின் கடற்படைக்கு, புதிதாக எம்ஹெச்-60ஆர் சீஹாவ்க் ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளனர். மொத்தம், 24 ஹெலிகாப்டர்கள் வாங்க உள்ளனர். மேலும், விலைக் குறிப்பிடாத அளவில், போயிங் நிறுவனம், தன்னுடைய 114 எப்-15ஈஎக்ஸ் போர் விமானத்தினை உருவாக்கித் தரும் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

அதே போல், அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலுடன், ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்கள் விற்கப்பட உள்ளது. இது எப்படியும், 10,000 கோடிக்கும் விற்கப்பட உள்ளது. மேலும், பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. மோடி மற்றும் டிரம்ப்பும் சந்திக்கும் பொழுது தான், இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS