பாகிஸ்தான்-இந்தியா இடையே மத்தியஸ்தம்! அமெரிக்க அதிபர் விருப்பம்!

27 September 2019 அரசியல்
trump2.jpg

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலைவர்கள் பங்குபெறும், உங்கா மாநாட்டிற்காக, இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் உள்ளனர். அங்கு இருவர்களையும், தனித்தனியாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரண்டு நாட்டுத் தலைவர்களுமே எனக்கு நல்ல நண்பர்கள். இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் நல்ல நண்பர்கள். தற்பொழுது இரண்டு நாடுகளும், இந்த காஷ்மீர் விவகாரத்தில் மிகத் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இருப்பினும், அவை சரியாகும் என நான் நம்புகின்றேன்.

இந்தப் பிரச்சனையில், இரு நாட்டிற்கும் இடையில், ஒரு நாடாகவோ அல்லது மத்தியஸ்தராகவோ இருந்து செயல்பட, நான் தயார் எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், பாகிஸ்தான் மட்டுமே, காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச அளவில் எடுத்துச் செல்கின்றது. இந்தியாவைப் பொறுத்த வரையில், 370 சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ததில் உறுதியாகவே உள்ளது. மேலும், இது உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், வெளிநாட்டினர் தலையிடுவதில் விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளது.

ஏற்கனவே, இந்த விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறிய ட்ரம்ப், பின்னர் நான் தலையிட முடியாது என பல்டி அடித்தார். இந்நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் தலையிட தயார் என்றுக் கூறியுள்ளார். ஆனால், இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் மிகத் தெளிவாகவும், மிக உறுதியாகவும் உள்ளது.

HOT NEWS