டிரம்ப் அச்சம்! கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம்! ஜூன்1 நல்லது நடக்கும்!

30 March 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றால், அது அமெரிக்கா தான். அந்த நாட்டில் தற்பொழுது வரை, சுமார் 1,42,402 பேர் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் 4,767 பேர் குணமாகி உள்ளனர். 2,497 பேர் மரணமடைந்து உள்ளனர். இங்கு தான் கொரோனா பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து நிலவரங்களைப் பகிர்ந்து வருகின்றார். அவர் ஏற்கனவே அறிவித்தப்படி, தற்பொழுது தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியானது முதல் கட்டத்தில் உள்ளது. அடுத்த மூன்று கட்டங்களை வெற்றிக்கரமாக கடந்த பின் தான், தடுப்பூசிக் குறித்துக் கூற முடியும்.

இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களைச் சந்தித்தார் டொனால்ட் ட்ரம்ப். அவர் பேசுகையில், அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பின் அளவானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதில், நியூயார்க் மற்றும் நியூஜெர்ஜி மாகாணங்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

தற்பொழுது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைக் காரணமாக, வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி நடைபெற இருந்த அதிபருருக்கான முதற்கட்டத் தேர்தலானது, ஜூன் 23ம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுகின்றது. பலர் தங்கள் கடைகளில் உள்ள மருந்துப் பொருட்களைப் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்கின்றனர். அவ்வாறு விற்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகின்ற அடுத்த இரண்டு வாரங்களிலும், கொரோனா வைரஸ் பாதிப்பின் அளவானது, அமெரிக்காவில் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமூக விலகலை வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாகவும் அறிவித்தார். ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பிறகு, விடிவுகாலம் பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இதனால், ஜூன் மாதத்தில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க செய்தியாளர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS