குழந்தைகளை ஆற்றில் வீசியது பொய்யான செய்தி! உண்மை இதோ!

13 April 2020 அரசியல்
ganges.jpg

பசியின் கொடுமையால், தன்னுடைய ஐந்து குழந்தைகளை நதியில் பெண் ஒருவர் வீசினார் எனும் செய்தி பொய்யானது என, உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கால், பல கோடிக் கணக்கான தினக்கூலி வேலை செய்யும் மக்களின் இயல்பு வாழ்க்கையானது, கேள்விக்குறியாகி உள்ளது.

சமூக வலைதளங்களில், தற்பொழுது பரபரப்பாக ஒரு செய்தி ஒன்று உலா வருகின்றது. அதில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெண் ஒருவர், இந்த ஊரடங்கின் காரணமாக தன்னுடைய ஐந்து குழந்தைகளுக்கு உணவு வழங்க இயலாத காரணத்தினால், ஆற்றில் வீசிவிட்டு சென்றுள்ளார் என செய்திகள் பரவின. இதனை, அவுட்லுக் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டன.

இதனை ஆய்வு செய்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம், இது போலியான செய்தி என விளக்கமளித்துள்ளது. பத்தோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் விரக்தியின் காரணமாக, அந்தப் பெண் கங்கையில் வீசியிருப்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது பற்றி விசாரித்து வருகின்றனர். தூக்கி வீசிய மஞ்சு தேவி என்றப் பெண்ணின், வாக்குமூலத்தின் அடிப்படையில் இதனை போலீசார் விளக்கியுள்ளனர். அந்தப் பெண்ணும், வீடியோ பதிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

HOT NEWS