தெலுங்கானாவில் வலுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம்!

14 October 2019 அரசியல்
chandrashekarrav.jpg

தொடர்ந்து, தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தெலுங்கானா போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் சுமார் 48,000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல், தர்ணா உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவராத்திரி பண்டிகை ஆரம்பித்த காலத்தில், ஊதிய உயர்வு, தெலுங்கானா போக்குவரத்துக் கழகத்தை தெலுங்கானா அரசுடன் இணைத்தல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார், 50,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வரும் 5ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும், பணிக்குத் திரும்ப வேண்டும் என, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அவருடைய பேச்சினால், ஒரு சில ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர். இதனிடையே, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சமயத்திலும், போராட்டம் தொடர்ந்ததால், போக்குவரத்துக் கழகத்தின் வருமானம் கடுமையாகப் பாதித்தது. பொதுமக்களும் வாகனம் இன்றித் தவித்தனர்.

இதனால், உயர் அதிகாரிளிடம் பேசிய பின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரையும், ஒட்டு மொத்தமாக டிஸ்மிஸ் செய்வதாக சந்திரசேகர ராவ் அறிவித்தார். இதனால், தெலுங்கானா முழுவதுமே அதிர்ந்தது.

அவர்களுக்குப் பதிலாக, புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், அதுவரை ஒப்பந்த ஊழியர்கள் வாகனங்களை இயக்குவார்கள் எனவும் கூறினார். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால், போராட்டத்தினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளித்தார். அவரை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதற்கும் அரசாங்கம் பெரிய அளவில் எவ்வித, அறிப்பினையும் வெளியிடவில்லை. இதனால், கோபமடைந்த ஊழியர்கள், அவருடைய சொந்த ஊரான கம்மம் மாவட்டத்தில், போராட்டத்தினை நடத்தினர். அங்கு ஓடும் பேருந்துகளையும் சேதப்படுத்தினர்.

இதனால், தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில், பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால், இத்தகையப் போராட்டங்களுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் எனவும், புதிய போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு அமர்த்துவேன் எனவும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS