திருப்பதி சொத்துக்கள் விற்பனை! ஏழுமலையானுக்கே கோவிந்தா போடும் தேவஸ்தானம்!

24 May 2020 அரசியல்
thirupathi.jpg

திருமலை திருப்பதி கோயில் தான், உலகின் மிகவும் பணக்கார கோயிலாக கருதப்படுகின்றது. அந்தக் கோயிலுக்கு சமீபத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்குப் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை ஈடுகட்டும் முயற்சியில் பல நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகின்றது.

திருப்பது ஏழுமலையானுக்கு வங்கிகளில் 14,000 கோடி ரூபாய் பணமும், 9 டன் தங்கமும் கையிருப்பாக உள்ளது. அது தவிர்த்து, பக்தர்கள் அளித்த நிலமும் சொத்துக்களும் இந்தியாவின் பலப் பகுதிகளில் உள்ளன. வங்கிகளில் உள்ளதை தொடாமல், எவ்வாறு செலவுகளைக் குறைக்கலாம் எனவும், கட்டுப்படுத்தலாம் எனவும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக தமிழகத்தில் உள்ள 23 சொத்துக்களை விற்க உள்ளதாக, அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்பொழுது அந்த கோயிலில் வேலை செய்யும் பணியாளர்களுக்காக சம்பளம் வழங்க 125 கோடி தேவைப்படுகின்றது. இதற்காகவே, இந்த விற்பனை முடிவுக்கு தேவஸ்தானம் முன் வந்துள்ளது.

வருகின்ற 2020-2021ம் ஆண்டுக்கான திருப்பதி பட்ஜெட்டின் மதிப்பு 3310 கோடி எனவும், அதில் பக்தர்களின் காணிக்கையானது 1351 கோடியினை பெறும் எனவும், மீதியுள்ள தொகையில் 302 கோடியினை திருப்பதி தரிசன டிக்கெட் மூலமும், 400 கோடியினை லட்டு மூலமும், 706 கோடியினை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதன் மூலம் திரட்ட இயலும் என தேவஸ்தானம் நம்புகின்றது.

இந்த சொத்துக்கள் விற்பனையை, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தினமும் 50,000க்கும் அதிகமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்த சென்ற நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுன் அமலில் உள்ளதால், கோயில் உண்டியலின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS