தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு, திமுக முதல் அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது அமமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பல்வேறு தரப்பினரின் வேண்டுகோள்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், ‘மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் பிடில் வாசிக்கும் 21 ஆம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக’ தமிழக ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
டீக்கடைகளைக் கூடத் திறக்கக்கூடாது என்பவர்கள் மதுக்கடைகளைத் திறக்கத் துடிப்பதன் மூலம், 43 நாட்கள் மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தாலும், அரசாங்கத்தால் மதுக்கடைகளைத் திறக்காமல் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் எல்லையோர மாவட்ட மக்கள் அங்கே சென்று மதுவை வாங்கமுடியுமானால், சென்னை வாசிகள் அருகிலுள்ள மாவட்ட எல்லைகளை தாண்டிச்சென்று மதுவை வாங்க முடியாதா? அப்படி வாங்கினால் அதையும் திட்டமிட்டே அனுமதித்து பழனிசாமி அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில்,மதுக்கடைகளைத் திறப்பதில் தீவிரம் காட்டுவது விபரீதத்தில் போய் முடிந்துவிடும்.எனவே வீண் பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்தில் நாளை மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பல்வேறு தரப்பினரின் வேண்டுகோள்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், ‘மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் பிடில் வாசிக்கும் 21 ஆம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக’ தமிழக ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 6, 2020