ஹைட்ரோகார்பன் திட்டம்! அமமுக தினகரன் கடும் கண்டனம்!

20 January 2020 அரசியல்
ttv.jpg

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என, மத்திய அரசுக் கூறியுள்ளதற்கு அமமுக கட்சியின் பொதுச் செயலாளர், தினகரன் தன்னுடைய கண்டனத்தினைப் பதிவு செய்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது, கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில், காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பிகளை வைத்திருக்கின்ற தி.மு.கவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து, நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும் என்று, டிடிவி தினகரன் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் மூலம் தெரிவித்துள்ளார்.

HOT NEWS