நவம்பர் 7 சின்னம்மா ரிட்டன்ஸ்! டிடிவி தினகரன் மதுரையில் அதிரடி பேச்சு!

03 February 2021 அரசியல்
ttv.jpg

வருகின்ற நவம்பர் 7ம் தேதி அன்று, சசிகலா அவர்கள் தமிழகம் திரும்ப உள்ளதாக, அமமுக தலைவர் டிடிவி தினகரன் இன்று தெரிவித்து உள்ளார்.

இன்று மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய டிடிவி, சசிகலாவின் பக்கம் தான், அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் இருக்கின்றனர் எனவும், பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னம்மாவினை வரவேற்க அனைவரும் திரண்டு வர வேண்டும் எனவும் கூறினார். மேலும் அவர் பேசுகையில், உண்மையின் பக்கம் இருப்பவர்களும், விசுவாசத்தின் பக்கம் இருப்பவர்களுமே சசிகலாவின் ஆதரிக்கின்றனர் எனக் கூறினார்.

வருகின்ற நவம்பர் ஏழாம் தேதி அன்று, பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு சின்னம்மா சசிகலா வருகின்றார் எனவும், அதன் பின்னர் தான் அரசியலில் அனல் பறக்கும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS