சிரிய வீரர்கள் மீது தாக்குதல்! 55 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்!

15 February 2020 அரசியல்
soldiersattack.jpg

சிரியாவில் நடைபெற்று வரும், உள்நாட்டு போரானது உச்சக்கடத்தினை எட்டியுள்ளது. தற்பொழுது வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் இருப்பிடத்தினை விட்டு, பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.

சிரியாவில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கும், துருக்கி இராணுவ வீரர்களுக்கும் இடையில் பல மாதங்களாக போர் மற்றும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு, துருக்கி இராணுவத்தினைர் மீது, சிரியாவின் இராணுவ வீரர்கள் நடத்தியக் கொலை வெறித் தாக்குதலில், 13 துருக்கி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், அந்நாட்டில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று சிரிய படைகள் மீது, துருக்கியின் ஆதரவு பெற்ற படைகள் தாக்குதல் நடத்தினர். இதனை சிரிய படை வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தாக்குதலில் 55 சிரியாவின் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை, துருக்கியின் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை, துருக்கியின் அதிபர் எர்டோகனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், சிரியாவில் உள்ள எங்கள் படைகள் மீது தாக்குதல் நடத்தினால், நாங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதாரத்தினைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம். சரியானப் பதிலடியினைத் தருவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அந்நாட்டில் தற்பொழுது பதற்றம் அதிகரித்துள்ளது.

HOT NEWS