துருக்கி விமானம் விழுந்து விபத்து! பலர் படுகாயம்!

06 February 2020 அரசியல்
turkeyplancrash.jpg

துருக்கியில் விமானம் விபத்துக்குள்ளானதினால் மூன்று பேர் பலியாகி உள்ளதாகவும், 179 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி நாட்டில் உள்ள ஏஜியன் நகரில் இருந்து, இஸ்தான்புல் நகரில் உள்ள சபிஹா கோக்கன் விமான நிலையத்திற்கு, 189 பயணிகளுடன் பெகஸஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கிளம்பியது. இந்த விமானம், சபிஹா கோக்கன் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும் பொழுது, விமானத்தின் சக்கரங்கள் சறுக்கியதினால் விபத்துக்குள்ளானது.

இதனால், இந்த விமானம் ஓடு தளத்தில் இருந்து பல அடி தூரம் சென்று சறுக்கிக் கொண்டே சென்று, விழுந்து இரண்டாக உடைந்தது. இதனால், விமானத்தின் இயந்திரங்களில் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால், விமானத்தின் ஊழியர்கள் உட்பட, பயணிகள் அனைவரும் பயச்சத்தில் கூச்சலிட்டனர்.

இந்த சம்பவம், விமான நிலையத்தில் நடைபெற்றதால், விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக, விமானத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மூன்று பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தனர். மேலும், பலருக்குத் தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விமான விபத்து குறித்து, தற்பொழுது விசாரணை ஆரம்பித்து உள்ளனர்.

HOT NEWS