நாளைக்குள் வெளியேறுங்கள்! இல்லையென்றால் உங்கள் தலை தரையில் நசுக்கப்படும்!

21 October 2019 அரசியல்
syriantroops.jpg

நாளை மாலைக்குள் வெளியேறாவிட்டால், தலைகள் தரையில் வைத்து நசுக்கப்படும் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவின் வடக்குப் பகுதிகளில், குர்த் ஜனநாயகப்படையினருக்கும், துருக்கி இராணுவத்திற்கும் இடையே, சண்டை நடைபெற்று வருகின்றது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தினை பதிவு செய்தன. மேலும், 100 பில்லியன் அளவிலான பொருளாதார வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்படும் என, அமெரிக்கா எச்சரித்தது.

இதனால், வேறு வழியின்றி, தாக்குதலினை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக துருக்கி அரசு அறிவித்தது. ஆனால், அந்த 5 நாட்களுக்குள் அப்பகுதியில் உள்ள குர்த் ஜனநாயகப் படை வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே குர்த் படையினர், துருக்கி இராணுவத்தினர் மீது, அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாக, துருக்கி இராணுவ அதிகாரி கூறினார்.

இதற்குப் பதிலளித்துள்ள குர்த் படையினர், துருக்கி தான் அமைதி ஒப்பந்தத்தினை மீறி, எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது என்றுள்ளனர். இது குறித்துப் பேசியுள்ள துருக்கி அதிபர் எர்டோகன், நாளை மாலைக்குள் குர்த் படையினர், ஆக்கிரமிப்புப் பகுதிகளை விட்டுவிட்டு, உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையென்றால், அவர்களுடையத் தலைகள் தரையில் வைத்து நசுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மாலையுடன் ஐந்து நாள் அமைதி ஒப்பந்தம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கத்து.

HOT NEWS