பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரோனை, அந்நாடானது தூக்கி எறியும் என, துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரோன், சமீபத்தில் இஸ்லாமிய மதக் குருவாக அனைவராலும் மதிக்கப்படும், முகம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சினை பேசியிருந்தார். இதற்கு உலகமெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை, அனைத்து முஸ்லீம் நாடுகளும் தடை செய்ய வேண்டும் என, துருக்கி அதிபர் எர்டோகன் கேட்டுக் கொண்டார்.
பல அரபு நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பினைக் காட்டியதன் காரணமாக, பிரான்ஸ் அதிபர் தன்னுடையக் கருத்து விளக்கம் அளித்தார். இதனால், உலகளவில் ஏற்பட்ட சலசலப்பானது அடங்கியது. இந்த சூழலில், தற்பொழுது துருக்கி அதிபர் தையீப் எர்டோகன் இஸ்தான்புல் நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், விரைவில் பிரான்ஸ் நாடானது, அந்நாட்டினை ஆளுகின்ற மேக்ரோனை தூக்கி எறியும் எனவும், மேக்ரோன் தான், அந்நாட்டின் மிகப் பெரிய தலைவலி எனவும் கூறியுள்ளார். சிரிய நாட்டின் மீது தொடர்ந்து போர் உள்ளிட்டவைகளைச் செய்து வருகின்ற துருக்கிக்கும், பிரான்ஸிற்கும் இடையில் சிரிய நாட்டால் தான் பிரச்சனை ஏற்பட்டது. அது தற்பொழுது நாளுக்கு நாள் பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.