தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய துருக்கி!

18 October 2019 அரசியல்
syriantroops.jpg

சிரியா மீதான தாக்குதலை, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் எச்சரிக்கைக்குப் பின், தற்காலிகமாக துருக்கி அரசு நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா தன்னுடையப் படைகளை பின் வாங்கிக் கொண்ட பிறகு, துருக்கித் தன்னுடையத் தாக்குதலை குர்த் ஜனநாயகப் படை மீது நடத்த ஆரம்பித்தது. இதனால், சிரியாவின் எல்லைப் பகுதியில் கடுமையான தாக்குதல்களும், அதனைத் தொடர்ந்துப் பதற்றமும் நிலவி வந்தன.

இதனால், அமெரிக்கா துருக்கியை எச்சரித்தது. தொடர்ந்து, தாக்குதல் நடத்தினால், 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறியது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ரஷ்யாவும் துருக்கி அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

துருக்கி அரசாங்கம், சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றது. இந்நிலையில், தற்பொழுது தற்காலிகமாக ஒன்பது நாட்களுக்கு மட்டும், இந்தத் தீவிர தாக்குதலை நிறுத்தியுள்ளது. இதனை அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அங்கு துருக்கி அரசாங்கத்தால் தீவிரவாதிகள் என அழைக்கப்படும், குர்த் ஜனநாயகப் படை விலகிச் செல்லும் வரை, துருக்கி அரசாங்கம் அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

HOT NEWS