பாகிஸ்தானிற்கு துருக்கி கப்பல் கட்டித் தரும்! துருக்கி அதிபர் பேட்டி!

01 October 2019 அரசியல்
shipcannon.jpg

பாகிஸ்தானிற்கு துருக்கி நாடு போர்க் கப்பலைக் கட்டித் தரும் என, துருக்கி அதிபர் எர்டாகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற, துருக்கி போர்க்கப்பல் மற்றும் பாகிஸ்தான் போர்க் கப்பல் பயிற்சி சந்திப்பின் பொழுது பேசிய துருக்கி அதிபர், பாகிஸ்தானிற்கு துருக்கி விரைவில் ஒரு போர்க்கப்பலை கட்டித் தரும், என்றுக் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், உலகில் உள்ள பெரிய 10 நாடுகளில், துருக்கியும் போர்க் கப்பலை வடிவமைத்து, உருவாக்கி, விற்பனை செய்யும் திறன் படைத்த ஒன்று. தற்பொழுது, பாகிஸ்தான் நாட்டிற்கான போர்க் கப்பலை உருவாக்கும் பணியானது தொடங்கி உள்ளது.

துருக்க நாட்டில் உருவாக்கப்படும், MILGEM ரக போர்க்கப்பல்களால், எளிதாக எதிரிகளின் ராடாருக்குள் சிக்காமல் பயணிக்கும் திறன் படைத்தவை. அவை பாகிஸ்தான் கப்பல் படையில் இணையும் பொழுது, அதன் பலம் அதிகரிக்கும். மணிக்கு 29 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த கப்பல், 2,400 டன் எடையை சுமக்கும் திறன் படைத்தது.

www.ndtv.com/world-news/turkey-building-naval-warship-for-pakistan-says-president-erdogan-2109856

HOT NEWS