கொரோனா விடுமுறை! டிவி மூலம் படிக்கும் குஜராத் மாணவர்கள்! எங்கே கல்வி டிவி?

19 March 2020 அரசியல்
schoolstudents.jpg

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும், வேகமாகப் பரவி வருகின்றது. அதனைத் தடுக்கும் பொருட்டு, இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ளப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பள்ளிகளில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகள் வீட்டில் இருக்கின்றனர். இவர்களுடையப் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு, குஜராத் பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி, இன்று முதல் மாநிலத் தொலைக்காட்சிச் சேனல்களில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு, படிப்பு சம்பந்தமான நிகழ்ச்சிகளும், பாடமும் எடுக்கப்பட உள்ளன. இதனால், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, இந்த விடுமுறைக் காலங்களில் படிக்க இயலும் என்றுக் கூறப்படுகின்றது.

சிபிஎஸ்சி தேர்வுகளும், தற்பொழுது தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு வைக்கப்படாமல், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவ மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தினைப் பொருத்தமட்டில், மார்ச் 31ம் தேதி வரை, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கல்லூரிகளும் 31ம் தேதி வரை மூடப்பட்டு உள்ளன. இதனால், மாணவர்கள் வீடுகளில் இருக்கின்றனர். அவர்களுடைய படிப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் சார்பில் கல்வித் தொலைக்காட்சியானது, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை அது செயல்படுகின்றதா என்றத் தகவல்கள் வெளியாகவில்லை. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், இந்த சேனல் மூலம், தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். ஆனால், அந்த டிவி சேனல் தெரியவில்லை எனப் பலரும் கூறியுள்ளனர்.

HOT NEWS