உங்க டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?

10 March 2019 தொழில்நுட்பம்
twoyeargirl.jpg

கூகுள், பேஸ்புக்கைத் தொடர்ந்து தற்பொழுது, டிவிட்டரும் தன்னுடைய பயனர்களின் பாதுகாப்பை விரிவாக்கியுள்ளது. இதன் படி, தற்பொழுது அதிக அளவிலான பாதுகாப்பு அம்சங்களை அனைவருடைய டிவிட்டர் அக்கவுண்ட்டிலிலும் இணைத்துள்ளது.

பொதுவாக, ஒரு அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டால், அந்த அக்கவுண்டை நம்மால் பயன்படுத்த இயலாது. ஏனெனில், ஹேக்கர்கள் அந்த அக்கவுண்ட்ன் பாஸ்வேர்டை மாற்றிவிடுவர். இனி, டிவிட்டரில் இந்த வேலை நடக்காது.

1) தற்பொழுது இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சத்தைப் பற்றிப் பார்ப்போம். உங்கள் டிவிட்டர் அக்கவுண்ட்டை முதலில் ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அதில் செட்டிங்சைத் தேர்வு செய்யுங்கள். பின்னர், அதிலிலுள்ள மொபைல் ஆப்சனை கிளிக் செய்யுங்கள். இதில் உங்கள் மொபைல் எண்ணை இணைக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட ஓடீபி எண் உங்கள் மொபைலுக்கு வரும். பின்னர், அந்த எண்ணை டிவிட்டரில் காட்டும் இடத்தில் பதிவிடும் பொழுது, உங்களுடைய மொபைல் நம்பர் டிவிட்டருடன் சிங்க்காகிவிடும். ஒரு வேளை யாராவது, உங்களுடைய டிவிட்டர் அக்கவுண்டை ஹேக் செய்துவிட்டால், உங்களுடைய மொபைலுக்கு எஸ்எம்எஸ் வரும்.

2) செட்டிங்சில் உள்ள ஆப்ஸ் மற்றும் டிவைசஸ் என்ற பட்டனை அழுத்தவும். இது புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சமாகும். இதில், நீங்கள் எந்த பொருளில் இருந்து உங்கள் அக்கவுண்டைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற வெப்சைட்டுகளின் தகவல்களும் வந்துவிடும். ஒருவேளை, நீங்கள் சந்தேகப்படும் விதத்தில், ஏதேனும் பிற வெப்சைட்டுகள் அல்லது பிற இணைப்புகள் இருந்தால், உடனே ரிவோக் ஆக்சஸ் என்ற பட்டனை அழுத்துங்கள்.

3) உங்களுடைய, அக்கவுண்டை பயன்படுத்தும் முன், அது இதற்கு முன் எங்கிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிந்து கொள்ள, இந்த ஆப்ஸ் மற்றும் டிவைசஸ் பட்டனை அழுத்தவும். அதில், எந்தெந்த இடங்களில் இருந்து உங்கள் அக்கவுண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை, நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், உடனடியாக, லாக் அவுட் என்றப் பட்டனை அழுத்தவும்.

4) உங்கள் அக்கவுண்ட்ல் செட்டிங்சைக் கிளிக் செய்யவும். அதில் அக்கவுண்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவும். இதில், செக்யூரிட்டி என்ற பகுதியில் செட் அப் லாக் இன் வெரிபிகேசனை கிளிக் செய்து கொள்ளவும். பின்னர், அதில் கேட்கும் தகவல்களைத் தரவும்.

மேற்கூறியபடி, நீங்கள் செய்தால், உங்களுடைய டிவிட்டர் அக்கவுண்டை யாரும் ஹேக் செய்ய இயலாது.

HOT NEWS