சீனாவில் 2ம் கட்ட சோதனையில் 2 மருந்துகள்!

30 June 2020 அரசியல்
coronavirusmedicinef.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸானது தற்பொழுது, ஒரு கோடிக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது. இந்த வைரஸால், 4,75,000 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸால், இந்தியா உட்படப் பல நாடுகளில், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கினால் பொருளாதார முடக்கமும் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து தான் இந்த வைரஸானது, திட்டமிட்டுப் பரப்பப்பட்டு உள்ளது என, அமெரிக்கா உட்படப் பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், சீனாவினைப் பழிவாங்க பல நாடுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றன.

அவர்களை சமாதானப்படுத்தும் விதமாகவும், இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தற்பொழுது சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே, ஒரு மருந்தானது கண்டுபிடிக்கப்பட்டு இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது. இந்த சோதனையில், சீனாவில் தற்பொழுது புதிதாக இரண்டு மருந்துகள் இரண்டாம் கட்ட சோதனைக்குச் சென்றுள்ளன.

இது குறித்து சீனாவின் சிஎன்பிஜி எனப்படும் அமைப்பானது, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, சீனாவில் மனிதர் ஒருவர் மீது மருந்து சோதிக்கப்பட்டதாகவும், அதில் அந்த மருந்து வெற்றிப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. அதே போல் மற்றொரு மருந்தும் நல்லப் பலனைத் தந்துள்ளதாக கூறியுள்ளது. ஒரு மருந்தானது, பீஜிங்கில் இருந்தும் மற்றொரு மருந்தானது ஊஹானில் இருந்தும் உருவாக்கப்பட்டு உள்ளது.

தற்பொழுது முதற்கட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில், ஜூன் 23ம் தேதி அன்று இரண்டாம் கட்ட சோதனையானது தொடங்கி உள்ளது. இந்த சோதனையானது, ஒரே நேரத்தில் அபுதாபி, சீனாவின் ஊஹான் மற்றும் பீஜிங் நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த இரண்டாம் கட்ட சோதனை முடிந்ததும், கடைசிக் கட்ட சோதனையானது செய்யப்படும். பின்னர், மருந்து விற்பனைக்கு வந்துவிடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS