இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சுமார் இரண்டு கோடி குழந்தைகள் பிறக்கும் என, யூனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகிம் பல நாடுகளும், இந்த ஊரடங்கு உத்தரவினை கடுமையாகப் பின்பற்றி வருகின்றன. இதனால், கொரோனா பரவும் வேகம் குறைவாக உள்ளது.
இந்த இடைவெளியில், பலருக்கும் திருமணம் ஆகி வீட்டிலேயே ஆணும் பெண்ணும் இருப்பதால், சுமார் 16 கோடி குழந்தைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பிறக்க வாய்ப்பு இருப்பதாக யுனிசெப் நிறுவனம் கணித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கணித்துள்ளது.
சீனாவில் ஒரு கோடியே முப்தைந்து லட்சம் குழந்தைகளும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள் பிறக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 33 லட்சம் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்கள் சமூக இடைவெளியினைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.
தகுந்து மருந்துகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், அப்பொழுது தான் பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறக்க இயலும் எனவும் கூறியுள்ளது.