பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் இரண்டு பெண்களுக்கு கொரோனா!

05 May 2020 அரசியல்
coronaplasma.jpg

தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமான, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்பொழுது இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 12 ரெட் சோன்களும், 24 ஆரஞ்சு சோன் பகுதிகளும் உள்ளன. ஒரே ஒரு கிரீன் சோன் பகுதியே, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக, ஊரடங்கு காலத்தில் பல தளர்வுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், தற்பொழுது அங்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

பெங்களூர் சென்று வந்திருந்த இரண்டு பெண்களுக்கு, இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. 52 மற்றும் 60 வயது நிரம்பிய இவர்களை, வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றது தமிழக சுகாதாரத்துறை. இந்நிலையில், மதுவிற்பனைக் குறித்து பேட்டியளித்த, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, கள்ளச்சாராயம் தயாரிக்கப்படாமல் இருக்கவும், அரசாங்கத்தின் வருவாய்க்காகவுமே ஒயின்ஷாப்புகள் திறக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS