2.4 லட்சம் லட்டுக்கள் ஒரே நாளில் விற்பனை! தேவஸ்தானம் அறிவிப்பு!

26 May 2020 அரசியல்
tirupatiladdu.jpg

நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சத்து 40,000 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற மே-31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக திருமலை திருப்பதி கோயிலானது மூடப்பட்டு உள்ளது.

இதனால், அந்தக் கோயிலின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, கோயிலின் செலவுகளை சமாளிக்கும் பொருட்டு, கோயிலில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காகத் தயாராக இருந்து வந்த லட்டுக்களை, தற்பொழுது விற்க முடிவு செய்தனர். ஆந்திராவின் 12 மாவட்டங்களில் இந்த லட்டுக்களானது, தேவஸ்தான அலுவலகங்கள் மூலம் விற்பனைக்கு வந்தன.

நேற்று இந்த லட்டுக்களை அதிக ஆர்வமுடன் பலரும் வந்து வாங்கிச் சென்றதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரே நாளில் இவ்வளவு லட்டுக்கள் விற்கப்பட்டு உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த லட்டுக்கள் விற்பனையானது, கோயில்கள் திறக்கப்பட்டதும் விற்பனைக்கு வரும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து, இந்த லட்டுக்கள் அனைத்தும், அனைத்து தேவஸ்தான அலுவலகங்கள் மூலம் விற்கப்படும் என்று கூறப்படுகின்றது.

HOT NEWS