பாகிஸ்தானில் 2 இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு!

16 June 2020 அரசியல்
imrankhan10.jpg

பாகிஸ்தானில் இந்தியத் தூதரக அதிகாரிகாளகப் பணிபுரிந்த இருவர், தற்பொழுது மாயமாகி உள்ள அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் இடையில் தற்பொழுது மோதல் வெடித்துள்ளது. இந்தியாவின் எல்லைகள் மீது, பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து, பல அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் நடத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய வெளியுறவுத் தூதரகத்தில் வேலை செய்த இருவர் திடீரென்று மாயமாகினர். இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், அவர்கள் தற்பொழுது விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் போலி அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு, இந்திய இராணுவத்திற்காக உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், அவர்களிடம் கள்ள நோட்டுக்கள் இருந்ததாகவும் பாகிஸ்தான் காவல்துறைக் கூறியுள்ளது. மேலும், அவர்கள் தங்களுடைய பிஎம்டபிள்யூ காரில் செல்லும் பொழுது, சாலையில் ஒருவரை இடித்துவிட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

அவர்களைக் கைது செய்த பாகிஸ்தான் போலீசார், காவல்நிலையத்தில் சிறை வைத்தனர். ஆனால், சர்வதேச விதிப்படி, தூதரக அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. இதனால், அவர்களை போலீசார் விடுதலை செய்தனர். இச்சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS