ரோகிங்கியா முகாமில் கொரோனா வைரஸ்! அலறும் வங்கதேசம்!

16 May 2020 அரசியல்
rohingyacamp.jpg

உலகின் மிகப் பெரிய அகதிகள் முகாம் என்றுக் கருதப்படுகின்ற, ரோகிங்கியா முகாமில் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் மூன்று லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர். 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா முகாம்களில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

மியான்மரில் இருந்த சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லீம்கள், அரசிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், இராணுவத்தினருக்கும் ரோஹிங்கியாவிற்கும் இடையில் மோதல் வெடித்தது. உயிருக்கு பயந்து, சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த சூழ்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ஹேக்ஸ் பசார் என்றப் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அத்துடன், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் வசித்து வந்தப் பகுதிக்கு அருகில் வசித்து வந்த சுமார் 1000க்கும் அதிகமானோர்களையும் தனிமைப்படுத்தி உள்ளது வங்கதேச அரசு. இதனால், வங்கேதேசத்தில் கடும் பீதி உருவாகி உள்ளது. ஒவ்வொரு பகுதியாக, வங்கதேச சுகாதார ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர். 5,000 நபர்கள் வசித்து வந்த ஒரு பகுதிக்கு சீல் வைத்தும் உள்ளனர்.

HOT NEWS