அர்னாப்பினை தாக்கியவர்கள் கைது! போலீசார் நடவடிக்கை!

24 April 2020 அரசியல்
arnab.jpg

அர்னாப் கோசுவாமியினைத் தாக்கியதாக, இரண்டு பேரினை போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நேற்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி என்றால், அது அர்னாப் கோஸ்வாமி தான். அவர் தன்னுடைய டிவி சேனலான, ரிபப்பளிக் டிவியில், சோனியாகாந்தி குறித்து ஒரு சில விஷயங்களைப் பேசினார். இது மாபெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. அவர் மீது, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், டிவி நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு நேற்று இரவு 12.15 மணியளவில், வீட்டிற்கு தன்னுடைய மனைவியுடன் சென்றுள்ளார் அர்னாப். அப்பொழுது, ரோட்டில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், அர்னாப்பின் கார் மீது மை உள்ளிட்டவைகளை வீசி, காரின் ஜன்னல் கண்ணாடியினைத் தட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் தப்பித்து விட்டனர்.

இதனை தன்னுடைய வீடியோப் பதிவின் மூலம், அர்னாப் கூறியுள்ளார். இது இந்திய அளவில், பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது. பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள காவல்நிலையத்தில், அர்னாப் கோஸ்வாமி புகார் அளித்தார். அவர் புகாரினை ஏற்றுக் கொண்ட காவல்நிலையம், குற்றவாளிகளைத் தேடுவதாக அறிவித்தது.

இந்நிலையில் தற்பொழுது அந்த இரண்டு குற்றவாளிகளையும் கண்டுபிடித்து, கைது செய்துள்ளது. அவர்கள் மீது, என்எம் ஜோசி மார்க் காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய சட்டத்தின் படி, 341 மற்றும் 504 பிரிவுகளின் கீழ், அர்னாப்பினைத் தாக்கியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

HOT NEWS