பாக்தாத்தில் ராக்கெட் தாக்குதல்! ஈராக்கில் பதற்றம்!

27 March 2020 அரசியல்
rocketlaunch.jpg

உலகம் முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், ஈராக் நாட்டில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், ஈராக்கில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. ஈராக்கினை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என, ஈராக்கின் நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இருப்பினும், அந்நாட்டின் க்ரீன் சோன் எனப்படும் பசுமைப் பாதுகாப்புப் பகுதியில், அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளும், அமெரிக்க தூதரகம் மற்றும் இராணுவப் பிரிவினர் உள்ளனர்.

அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தவோ, பொதுக்கூட்டங்களுக்கோ தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏவுகணைகள் அப்பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறின. இருப்பினும், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என, அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இது குறித்து, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக செய்தியினை வெளியிட்டு உள்ளன. இந்த்த் தாக்குதலில் எவ்விதமான அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதுப் பற்றியத் தகவல்கள் வெளியாகவில்லை.

HOT NEWS