இரண்டு வயதுக் குழந்தை, பண்ணையில் வளர்க்கப்பட்ட முதலைக்கு, உணவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரோம் ரோத் நீரி என்ற இரண்டு வயது பெண் குழந்தையைப் பற்றி தைவான் நாடே, சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மின்மின் என்ற 35 வயதுடையவர் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் உள்ள இடத்தில் புதியதாக ஒருப் பண்ணையை ஆரம்பித்து, அதில் முதலையை வளர்த்து வந்தார். அந்த முதலைகளின் மூலம் நல்ல லாபமும் பெற்றார். அவருடைய மனைவிக்கு, புதியதாக ஒரு குழந்தைப் பிறந்துள்ளது.
இந்நிலையில், அந்தப் பண்ணையில், முதலைகள் கான்கிரீட் சுவர்களால் ஆன, இடத்தில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும், இந்த நீரி குழந்தை, கான்கிரீட் சுவருக்குள் புகுந்து செல்லும் அளவிற்கு சிறியதாக இருந்ததால், அந்த முதலைகள் வளர்க்கப்பட்ட பகுதிக்குள் சென்றுள்ளது.
அப்பொழுது தான் அக்குழந்தையின் தாய், புதிதாகப் பிறந்தக் குழந்தையைப் பார்க்க சென்றுள்ளார். அந்த ஒரு சில நிமிடங்களுக்குள் அந்தத் துயரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. முதலைகள் பகுதிக்குள் புகுந்த குழந்தையை, ஒரு நிமிடத்திற்குள் பசியில் இருந்த முதலைகள் கடித்து உண்டு விட்டன. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த தந்தைக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. அந்தக் குழந்தையின் மண்டை ஓட்டினை, முதலைகள் பிடிங்கி உண்பதற்கு, ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு இருந்துள்ளன.
அந்தக் குழந்தையின் உடல் முழுமையாகக் கிடைக்காததால், அக்குழந்தையின் குடும்பத்தினர் சோகத்தில் கதறி அழுதனர். இதனை விசாரித்த காவல்துறை அதிகாரி, விசாரித்து நடந்த உண்மையை கூறியுள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு, தற்பொழுது அந்நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.