ஹகிபிஸ் புயலுக்கு 30க்கும் மேற்பட்டோர் பலி! இயல்பு வாழ்க்கை மூழ்கி உள்ளது!

14 October 2019 அரசியல்
typhoonhagibis2.jpg

ஜப்பானை சூறையாடிய ஹகிபிஸ் புயலுக்கு, இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜப்பானின் பெரும்பாலானப் பகுதிகள், வேகமாக சீரடைந்து வந்தாலும், முக்கியப் பகுதிகள் நீருக்குள் மூழ்கி உள்ளதால், இயல்பு வாழ்க்கைக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத பேய் மழையை, ஜப்பான் நாடு சந்தித்துள்ளது. மேலும், 225 மைல் வேகத்தில், சுழன்றடித்த ஹகிபிஸ் புயல் காரணமாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மேகங்கள் பிங்க் நிறத்தில் காட்சி அளித்தன.

புயல் கரையைக் கடந்ததும், அடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக, 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளில், மின் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல லட்சக்கணக்கான வீடுகளில் குடிநீர் இல்லாமல், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஜப்பானில் உள்ள ஒரு வழித்தடத்தில், புயல் மழையின் காரணமாக, புல்லட் ரயில் ஒன்று நீரில் மூழ்கி உள்ளது. இந்தப் பிரச்சனையிலிருந்து மக்களைக் காப்பதற்கு, சுமார், 25,000க்கும் அதிகமான இராணுவ வீரர்களை ஜப்பான் அரசு களமிறக்கியுள்ளது. நிவாரணப் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

HOT NEWS