11 பேர் பலி! ஹகிபிஸ் புயலின் கோரத் தாண்டவம்!

13 October 2019 அரசியல்
typhoonhagibis.jpg

ஜப்பானில், தற்பொழுது வரலாறு காணாத மழைப் பெய்து வருகின்றது. இந்த மழைக்குத் தற்பொழுது வரை 11 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு 7 மணிக்கு, டோக்கியோவிற்கு தென்மேற்குப் பகுதியில் டைபூன் ஹக்கிபிஸ் புயல் கரையைக் கடந்தது. இதனால், தற்பொழுது, ஜப்பான் நாட்டின் பலப் பகுதிகளில் கடுமையான மழையும், புயல் காற்றும் வீசி வருகின்றது.

சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றின் காரணமாக, 2,50,000க்கும் அதிகமான வீடுகளில், மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளதாக, ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சனைக்க குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கடந்த ஒரு வாரமாக எச்சரிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், அவசரத் தொலைத் தொடர்புக்காக, சிறப்பு இணைய வசதியும், வைஃபை வசதியும் செய்யப்பட்டு இருந்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளும், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அரசின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, பாதிப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு வானொலி நிலையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலின் காரணமாக, நேற்று ஜப்பான் நாட்டில் உள்ள மேகங்கள் பிங்க் நிறத்தில் காட்சியளித்ததால், பொது மக்கள் பீதி அடைந்தனர்.

HOT NEWS