ஜப்பானில் பிங் நிற மேகங்கள்! உலகமே அச்சம்!

12 October 2019 அரசியல்
pinksky1.jpg

உலகம் அழியப் போகிறதா என, தற்பொழுது உலகம் முழுக்கப் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, ஜப்பான்.

pinksky1.jpg

ஜப்பானில் உள்ள மேகங்களின் காரணமாகவே, இத்தகையப் பேச்சு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாடு சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ள நாடு. அங்கு தான், உலகில் முதன் முதலில் சந்திரன் தோன்றுகின்றது. இதனால் தான், அவர்கள் மிக வேகமாக வளர்ச்சிப் பெற்றனர் என்ற கூற்றும் நிலவி வருகின்றது. அதே போல், அந்த நாடு தான், உலக அளவில் அதிக முறை இயற்கைப் பேரிடர்களை சந்திக்கும் நாடு ஆகும்.

pinksky1.jpg

தற்பொழுது அந்த நாட்டில், வரலாறு காணாதப் புயல் வீசப் போவதாக, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தற்பொழுது ஜப்பான் நகர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கல்லூரி, பள்ளிகள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

pinksky1.jpg

மேலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு வீரர்கள் முதல் இராணுவ வீரர்கள் வரை அனைவருமே தயாராக இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் உலகம் அழியப் போகின்றதோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக, ஜப்பான் நாட்டில் உள்ள மேகங்கள் பிங்க் நிறத்தில் மாறி உள்ளதால், கடும் பயத்தில் உள்ளனர். அந்நாட்டின் ஒரு சிலப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டும் வருகின்றது. பயங்கர வேகத்துடன் சூறைக்காற்றும் வீசி வருகின்றது. ஹகிபிஸ் என்ற புயல், ஜப்பானைத் தாக்க உள்ளதாகவும், அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

1958க்குப் பின், ஜப்பான் சந்திக்க உள்ளப் பேரழிவினை ஏற்படுத்தும் சக்தி கொண்ட புயலாக இது இருக்கும் என, அந்நாட்டு அரசாங்கமே கூறிவிட்டது. மேலும், அதிகப்படியான மழை, அதிகப்படியான புயல் காற்று, நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் என இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எந்த நாட்டின் அரசாங்கமும் இப்படி வெளிப்படையாக கூறியதில்லை என்பதால், அந்நாட்டு மக்கள் தற்பொழுது இறைவழிபாட்டினை மட்டுமே நம்பி இருக்கின்றனர். அனைவரது வீடுகளிலும், மெழுகுவர்த்தி ஏற்றி, பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

HOT NEWS